(எம்.மனோசித்ரா)

நாட்டை எதிர்வரும் 14 நாட்கள் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Articles Tagged Under: இராணுவ தளபதி சவேந்திர சில்வா | Virakesari.lk

ஜூன் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படும் என்று சமூக லலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார்.

அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. எனவே இது போன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்வதாகவும் இராணுவத்தளபதி மேலும் குறிப்பிட்டார்.