வவுனியாவின் ஆடைத்தொழிற்சாலையால் தொற்று பரவல் ஏற்படும்

Published By: Digital Desk 4

21 May, 2021 | 08:18 PM
image

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகள் சுகாதார தரப்பினரின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுகின்றமையால் பாரிய தொற்றுப்பரவல் ஏற்ப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார். 

வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயின் சமகால நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொருளாதார நோக்கம் இருப்பதால் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றது.

அதனை நிறுத்துவதற்கான அதிகாரம் எமக்கில்லை. எனினும் தொடர்ச்சியாக ஆடைத்தொழிற்சாலைகளில் கள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளோம்.

எமது கருத்துக்களை அவர்கள் செவிமடுப்பதாக தெரியவில்லை. குறிப்பாக ஒமேகாலைன் ஆடைத்தொழிற்சாலையானது ஒரு கட்டிடத்திற்குள்ளேயே இயங்குகின்றது. 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு கடமை புரிகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலைகள் சிலநடைமுறைகளை பின்பற்றாமையினால் பாரியபரவல் ஒன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

எனவே அனைவரையும் ஒரே நேரத்தில் வேலைக்கு அழைக்காமல் வேலைநேரத்தில் சுழற்சிமுறையில் மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இயங்கலாம்.

அத்துடன் வெளிமாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் அன்ரியன் பரிசோதனையினை தனியார் வைத்தியசாலைகளில் கட்டணத்திணை செலுத்தி முன்னெடுக்கின்றனர். ஆனால் இங்குள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் சுகாதார திணைக்களத்தினையே சார்ந்திருக்கின்றார்கள். 

நாம் இது தொடர்பாக பலமுறை தெளிவூட்டல்களை வழங்கியும் அவர்கள் அதனை கடைப்பிடிக்கவில்லை. இது ஒரு பின்னடைவே. இது பாரிய பாதிப்பினையும் ஏற்படுத்தும் என்பதை கூறிக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49