(எம்.ஆர்.எம்.வசீம்)
மக்களுக்கு பூரண சுதந்திரம் கிடைத்தது குடியரசு தினத்திலாகும். மே 22 ஆம் திகதி இந்த தினத்தை கொண்டாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
லங்கா சமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் குடியரசு தினம் மே 22ஆ ம் திகதியாகும். 1972 குடியரசு தினத்துக்கு பின்னரே நாட்டுக்கு பூரண சுதந்திரம் கிடைத்தது.
1948 ஆம் ஆண்டு சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டாலும் அப்போது பூரண சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அங்கிகரிக்கப்படும்வரை, எமது நாட்டின் அரச தலைவர் பிரித்தானிய அரச தலைவராகும்.
பிரித்தானிய ராணுவ தளபதியே எமது நாட்டின் ராணுவ தளபதியாகும். அதேபோன்று நீதிமன்ற தீர்ப்பின் இறுதி முடிவு பிரித்தானிய நீதிமன்றமே மேற்கொள்ளும்.
ஆனால் 1972ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு பின்னரே அரச தலைவர், ராணுவ தளபதி, நீதிமன்ற சுதந்திரம் என இவை அனைத்தும் எமக்கு கிடைக்கப்பெற்றன. இதற்கான அரசியலமைப்பை எமது கட்சியைச் சேர்ந்து கொல்வின் ஆர்.டி, சில்வாவே சமர்ப்பித்தார்.
ஆனால் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோது இதுதொடர்பாக நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சர்ப்பித்து, நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேணடும் என தெரித்திருந்தேன். என்றாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.
மேலும் எமது அயல் நாடான இந்தியாவில் அந்த நாட்டின் குடியரசு தினத்தை அவர்கள் எந்த வருடமும் சுதந்திர தினத்தைப்போன்று கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் எமது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. எதிர்வரும் வருடங்களிலாவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM