துப்பாக்கிச் சூட்டில் விபத்துக்குள்ளான மணல் கடத்தல் கும்பலின் வாகனம் - யாழில் சம்பவம்

Published By: Digital Desk 4

21 May, 2021 | 04:30 PM
image

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். தப்பித்தவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு அதனைக் கடத்த பயன்படுத்தப்பட்ட ஹன்டர் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மணலை ஏற்றிச் சென்ற ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். எனினும் கட்டளையை மீறி பயணித்த ஹன்டரின் சில்லுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதனால் குறித்த வானத்தின் ரயர் வெடித்து கட்டுப்பாட்டையிழந்த ஹன்டர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனையடுத்து அதில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஒருவர் மட்டும் முள் கம்பிக்குள் சிக்குண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43