நுவரெலியா - இராகலையில் விபத்து : 21 பேர் படுகாயம் - இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

Published By: Digital Desk 2

21 May, 2021 | 02:19 PM
image

42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற  'டிரக்டர்' வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21.05.2021) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு ஏற்றிச்சென்ற டிரக்டர் வண்டியே, கொக்கி உடைந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிரக்டர் வண்டியில் முன்பகுதியில் சாரதி அமர்வதற்கான பகுதி இருக்கும். அதன் பின்னர் உள்ள பகுதியிலேயே கொக்கி மூலம் பெட்டி பொருத்தப்படும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.  சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை நிலவியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04