இத்தாலியில் ஏற்பட்ட பூமி அதிர்வினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லையென இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தயா பொல்பெல தெரிவித்துள்ளார்.

பூமி அதிர்வு ஏற்பட்ட பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 40 வசித்து வருகின்றனர் எனவும், பூமி அதிர்வினால் அவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் இல்லையென அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பூமி அதிர்வினால் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் வரையில் காணமல் போயுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.