கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முன்னிலை சோசலிச கட்சியால் 13 யோசனைகள் முன்வைப்பு

Published By: Digital Desk 4

20 May, 2021 | 09:18 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னிலை சோசலிசக் கட்சியினால் 13 யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், அவை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முன்னிலை சோசலிச கட்சியின் முதலாவது மாநாடு 13 ஆம் திகதி | Virakesari.lk

தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான யோசனைகள் என்ற தலைப்பிலான ஆவணம் முன்னிலை சோசலிசக்கட்சியினால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

முதலாவதாக தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைவரம் தொடர்பில் முறையான மதிப்பீடு ஒன்றைச் செய்வது அவசியமாகும். அதற்காக குறைந்தபட்சம் இருவாரகாலத்திற்கு பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி, பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்து, அதனடிப்படையில் நாட்டின் தற்போதைய நிலைவரம் பற்றிய அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். 

அக்காலப்பகுதியில் பொதுமக்களின் பொருளாதார நலனுக்கு அரசாங்கமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

அதன்படி அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடனான விடுமுறையைப் பெற்றுக்கொடுப்பதுடன் அன்றாட கூலித்தொழிலாளர்களுக்கு அவசியமான கொடுப்பனவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்ததாக சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக, சுகாதாரப்பிரிவினரின் தலைமையில் ஏனைய அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக மத்திய மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

அதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதுடன், அதனை அமுல்படுத்துவதில் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்புத் தரப்பின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர், அதனால் மரணமடைந்தோர் தொடர்பில் வெளியாகும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அதனை நிவர்த்தி செய்து, வழங்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்.

அதேபோன்று கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்காக ஜனாதபதி மற்றும் பிரதமருக்கான ஊதியத்தொகை குறைக்கப்பட வேண்டும்.

மேலும் அமைச்சர்களின் ஊதியத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, அவை அனைத்தையும் உள்ளடக்கியதாக "கொவிட் - 19 தடுப்பிற்கான பொதுநிதியம்" உருவாக்கப்பட வேண்டும்.  

கொரோனா தொற்றாளர்கள் அனைவருக்கும் நாடு முழுவதிலும் இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை உள்ளடங்கலான பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்த யோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29