அண்மையில் இந்தியாவின் புது டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தன்னுடைய இணையதள வலைதளப் பக்கத்தில் 'சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது' ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். 

பிறகு இது தொடர்பான செய்தி சில தமிழக ஊடகங்களில் வெளியானது. இந்த செய்திக்கு சிங்கப்பூர் அரசாங்கம் கடும் ஆட்சேபமும்,  மறுப்பும் தெரிவித்தது.‌ 

மேலும் இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது. 

இதனை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு கெஜ்ரிவால் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது. 

எனவே இதுதொடர்பான செய்திகள் தவறு என்பதால், சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் மறுப்பு செய்தியை வெளியிடுகிறோம்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து சிங்கப்பூர் அரசு ஏனைய உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதை அனைவரும் வரவேற்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

ஏற்கனவே வெளியான செய்தி
https://www.virakesari.lk/article/105894