வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை தோற்றியுள்ளது. இருப்பினும் வடக்கு மக்களின் பிரதிநிதிகள் பேரினவாத சிந்தனைகளிலிருந்து இன்றும் மீளவில்லை. அதனால் நாம் மீண்டும் யுத்தகாலத்தில் இருந்த நிலைப்பாட்டிற்கு திரும்ப நேரிடும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தாம் தேசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்பதையும் பகிரங்கமாக நாட்டு மக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.