11 மில்லியன் ரூபா மோசடி : பணத்தை செலுத்தி ஏமாந்திருந்தால் முறைப்பாடு அளியுங்கள் - பொலிஸ்

Published By: Digital Desk 2

20 May, 2021 | 01:36 PM
image

செ.தேன்மொழி

இணையத்தளத்தினூடாக அப்பிள் ரக தொலைபேசி மற்றும் கணினிகளை விற்பனை செய்வதாகக் கூறி 11 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக  பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முகத்துவாரம் மற்றும் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் , கொள்ளுப்பிட்டி , காலி வீதி இலக்கம் 662 என்ற முகவரியில் 'இன்ஸ்டா பை' என்ற நிறுவனத்தினூடாகவே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இணையவழியூடாக (Online Payment) பணத்தை செலுத்தி 15 நாட்களுக்குள் அப்பிள் ரக தொலைபேசி மற்றும் நவீன கணினி (IPad) என்பவற்றை கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவித்து குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு இணையவழியூடாகவும் , நேரடியாகவும் இவர்கள் பலரிடம் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு அப்பிள் நிறுவனத்துடனோ அல்லது அதன் பிரதிநிதிகளுடனோ இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பலரிடமிருந்து இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , அதற்குரிய பொருட்கள் இவர்களால் உரிய நபர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மோசடி தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கமைய 11 மில்லியன் ரூபா இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 70 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன்  பின்னர் , சிறையிலடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களால் நடத்திச் செல்லப்பட்ட 'இன்ஸ்டா பை' என்ற இணைய தளத்தினூடாக தொலைபேசி அல்லது நவீன கணணியை கொள்வனவு செய்வதற்கு பணத்தை செலுத்தியவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும். கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20