(ஆர்.யசி)
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் கொழும்பு சென்ட்ரல் தனியார் வைத்தியசாலையில் தனிமைப்படுதலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் நேற்று அவர் கொழும்பு சென்ட்ரல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று நண்பகல் அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென பெறுபேறுகள் வந்த போதிலும், நேற்று பிற்பகல் மீண்டும் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு, கடந்த 4ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.