நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையில், கொவிட் நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.


குறிப்பாக 55 வயதுக்கு மேற்பட்ட எவருக்கேனும் சுவாசக் கோளாறு போன்ற கொவிட் தொற்று நோய் அறிகுறிகள் இருப்பின் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அல்லது வைத்தியர் ஒருவருடைய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி விடயத்தை,  கொவிட்19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.