எம்.மனோசித்ரா
ஆரம்பத்தில் கொவிட் வைரஸ் இலங்கையில் இனங்காணப்பட முன்னரே விமான நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாகவே தொற்று பரவல் தீவிரமடைந்தது.
வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்னர் விமான நிலையத்தை மூடியமைப் போன்றே , தற்போது இலங்கையில் சமூகப்பரவல் தீவிரமடைந்த பின்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை காலம் கடந்த தீர்மானமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ண தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போது நாட்டில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையை விட மும்மடங்கு எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் சமூகத்தல் இருப்பதாக மருத்துவ சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ளன.
இதே நிலைமை தொடருமாயின் எதிர்வரும் மாதங்களில் யாருக்கு சிகிச்சையளிப்பது யாரை கைவிடுவது என்ற நிலைமை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து தெளிவுபடுத்தி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் அவர்களின் பரிந்துரை மிகவும் தாமதமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை காலம் கடந்ததாகும்.
இவ்வாறான நிலையில் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை படுக்கைகள் , அவசர சிகிச்சை பிரிவுகள், ஒட்சிசன் என்பவற்றிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். எனவே அபாயத்தை புரிந்து கொண்டு அரசாங்கம் இனியாவது முறையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறில்லை எனில் இதுவரை பதிவான மரணங்களுக்கும் , இனி பதிவாகக் கூடிய மரணங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM