எரியூட்டப்பட்ட நிலையில் ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம், உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது. 

சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெத்து வருகின்றனர்.