கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருச்செந்தூர், கல்லடி - வெல்லூர் கிராம சேவகர் பிரிவுகள், நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்து ஏனைய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.