நவகத்தேகம பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரை மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து தப்பிச்சென்று மாரவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான இளைஞர்,குறித்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரான இளைஞர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், சிறுமி நவகத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.