காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டுக்கு மிக பெரிய துரோகத்தை இழைத்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தினார்.

இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் சிறைப்படுத்தும் திட்டத்துக்கான நகர்வுகளே தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து போராடுவதற்கான புதிய சக்தி ஒன்றின் தேவை நாட்டின் தற்போதைய நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.