பெண் ஒருவரை கடத்திச் சென்று நான்கு பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் கண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கண்டி பொலிஸ் நிலையத்தில்  செய்துள்ள முறைப்பாட்டில்,

'நான் தனிமையில் இருந்த முச்சக்கர வண்டியில் வந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டேன். பின்னர் பாழடைந்த வீடொன்றுக்குள் பலவந்தமாக கொண்டுச் சென்று அங்கிருந்த மேலும் இருவரோடு நான்கு பேரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டேன்.

மேலும் தன்னிடம் இருந்த சகல தங்க நகைகளையும் கொள்ளையடித்து விட்டு தன்னை கண்டி, தென்னேகும்புறை பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.