ஜீவனின் கோரிக்கையையடுத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பி.சி.ஆர் இயந்திரம்

By T Yuwaraj

19 May, 2021 | 10:07 PM
image

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பி.சி.ஆர் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு  இடையிலான விசேட சந்திப்பில் தோட்ட வீடமைப்பு மற்றும்  சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய சுகாதார  அமைச்சு நுவரெலியா மாவட்ட மக்களின் நலன் கருதி புதிய பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் செயலிழந்த நிலையில் இம்மாவட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை உரிய முறையில் முன்னெடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் தோட்ட  வீடமைப்பு மற்றும்  சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று 19.5.2021  புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக நுவரெலியா மாவட்டத்தில் தங்கு தடையின்றி கொரோனா பி.சி.ஆர் பரிசோதணைகளை முன்னெடுத்து அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.இதனூடாக எமது மக்களுக்கான சுகாதார சேவைக்கு வழிவகுத்த அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கும்   தோட்ட  வீடமைப்பு மற்றும்  சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  நன்றிகளை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right