(செ.தேன்மொழி)
2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக இணையத்தளம், மின்னஞ்சல் மற்றும் தபாற்மூலமும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
இதற்கமைய வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளன.
அதற்கமைய எதிர்வரும் எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி இரவு 12 மணிவரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்வதற்காக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் புத்தகத்தை அன்றைய தினத்திலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.
புத்தக விற்பனை நிலையங்கள் , புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்த புத்தகத்தை பெற்றுக் கொள்ள முடியும்
பல்வேறு வழிகளில் விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய விண்ணப்பதாரிகள் அனைவரும் இணையத்தளத்தின் ஊடாக கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தங்களால் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கையொப்பமிட்டு, அதனை படம்பிடித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க வேண்டும்.
இதன்போது apply2020@ugc.ac.lk என்ற மின்னஞ்சலில் அதனை அனுப்பி வைக்க முடியும். மேலும் தபாற் சேவையூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
இம்முறை அதிகளவான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் , அதற்கமைய 41 ஆயிரத்து 755 பேர் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மாணவர்கள் விண்ணப்பப்படிவத்தை நிரப்புவதற்கு முன்னர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட புத்தகத்தின் 5 ஆவது பகுதியை நன்கு வாசித்திருக்க வேண்டும்.அந்த பகுதியில் விண்ணப்பப்படிவத்தை எவ்வாறு நிரப்பவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களது மின்னஞ்சல் ஒழுங்காக இயங்குகின்றதா என்பது தொடர்பிலும் பரீட்சித்து பார்க்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும் மின்னஞ்சல் முகவரி விண்ணப்பதாரிகளின் தனிப்பட்டதாக அமைந்திருக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இந்த மின்னஞ்சல் ஊடாகவே எதிர்வரும் காலங்களில் மாணவர்களுடன் தொடர்புக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை நிரப்பும் போது , தொலைபேசி இலக்கத்தை கட்டாயம் பதிவிட வேண்டும்.
உயர்தர பரீட்சையின் போது தெரிவுச் செய்யப்பட்ட பாடங்களுக்கமைய , பல்கலைக்கழக பாடநெறிகளை தெரிவுச் செய்யும் போது முழுமையான பாடநெறிகளை தெரிவுச் செய்வதுடன், கடந்த கால வெட்டுபுள்ளிகளை கருத்திற்கொண்டு பாடங்களை தெரிவுச் செய்யக்கூடாது. தாம்கற்க விரும்பும் பாடங்களை தெரிவுச் செய்யமுடியும்.
இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை நிரப்பும் போது , சரியான முறையில் அது நிரப்பப்பட்டுள்ளதா என கவனித்ததன் பின்னரே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். எழுத்துமூலமான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்னர் உரிய இடத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கவனிக்க வேண்டும். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட புத்தகத்தை நன்கு வாசிக்க வேண்டும். இதேவேளை விண்ணப்பத்தை நிரப்பும் போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் 1919 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு அது தொடர்பில் எம்மிடம் விபர்களை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் மாணவர்களுக்கு உதவிகளை புரிவதற்காக தனியான குழு ஒன்று செற்பட்டு வருகின்றது. இதேவேளை விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மூன்று வார காலம் வழங்கப்பட்டுள்ளதுடன் , வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி முதல் , எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி இரவு 12 மணிவரையில் அவை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கேள்வி: பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை தனிமைப்படுத்தியுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் எவ்வாறு பெற்றுக் கொள்வார்கள்?
பதில்: பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இளைத்தளத்தில் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்காக சிறியதொரு தொகை அறவிடப்படும்.
கேள்வி : இம்முளை பல்கலைக்கழக அனுமதியைப் எத்தனை மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்?
பதில்: இம்முறை உயர்தர பரீட்சையில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியுள்ளனர். இவர்களுள் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். வழமைக்கு மாறாக கடந்தவருடம் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் , இம்முறையும் அது செயற்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி : இணையதளத்தில் பெற்றுக் கொள்ளும் போது பணம் அறிவிடப்படும் என்று கூறுகின்றீர்கள். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் மத்தியில் புத்தகத்தை இலவசமாக வழங்க முடியாதா?
பதில்: புத்தகத்தை தயாரிப்பதற்காக ஏற்பட்ட செலவுகளை கருத்திற் கொண்டே இந்த பணம் அறவிடப்படுகின்றது.இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முறை தொடர்பில் போதிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளதால் , புத்தகத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
கேள்வி : உயர்தர பெறுபேறுகளில் பல்கலைக்கழக தெரிவு குறிப்பிடப்படாத மாணவர்கள் எவ்வாறு nது தொடர்பில் தெரிந்துக் கொள்ள முடியும்?
பதில்: அத்தகைய மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு தொடர்புக் கொண்டு அது தொடர்பான சிக்கல்களை உடனடியாக தீர்த்துக் கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM