நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பொது போக்குவரத்தினை அதிகம் பயன்படுத்தும் நிலை காணப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வசிப்பிடத்திலிருந்து அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை கொட்டகலை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக பத்தனை பிரதேசத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்தியே சென்றிருந்தனர். இதனால் தொற்றாளர்களினால் ஏனையோருக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு முன்னரான காலப்பகுதியிலும் கொட்டகலை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குடாஓயா பகுதிக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு பிரத்தியேக போக்குவரத்து சேவையினை ஏற்படுத்தி கொடுப்பதற்கு பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் தவறியிருப்பதாக அறிய முடிகின்றது.
இதனால் எதிர்வரும் காலங்களில் கொட்டகலை பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கொட்டகலை மற்றும் கொமர்சல் பகுதி பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM