யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ள 13ஆவது திருத்தத்தை, அவ்வாறே செயற்படுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 3

19 May, 2021 | 04:55 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வெற்றிகொள்ளப்பட்டிருக்கும்  விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, நாட்டில் ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று யுத்தவெற்றி தினம் தொடர்பில் அவர் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கு எதிராக வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாட்டின் விடுதலையை நிலையான விடுதலையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக இந்த வெற்றியை அடைந்துகொள்ள தனது உயிரை தியாகம் செய்து போராடிய படைவீரர்கள், அதனால் விதவையானவர்கள், அங்கவீனமுற்றவர்கள் மற்றும் அனைத்து படைவீரர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்த்தை கெளரவத்தை வழங்கவேண்டும்.

அதற்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவந்து, ராணுவ வீரர்களுக்கு நாங்கள் வாக்களித்த அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க நாங்கள் எமது ஆதரவை பூரணமாக வழங்குவதற்கு தயார்.

மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தது, இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகும். நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியினருக்கு பாதுகாப்பு அற்ற தன்மை நிலவுவதாக இருந்தால், தொடர்ந்தும் அநீதி ஏற்படுவதாக அவர்கள் நினைப்பதாக இருந்தால், அந்த பிச்சினைகளுக்கு மத்தியில் எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில்லை.

அதனால் அந்த தொகுதியினருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்து, விசேடமாக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, அந்த மக்கள் தொகுதியினருக்கும் மதத்தவர்களுக்கும் செவிசாய்த்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பாதுகாப்பற்ற நிலைதொடர்பில் அவர்களது வேண்டுகோல்களுக்கும் செவிசாய்த்து, வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த வெற்றியை, விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54