யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி சுடரேற்றி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.