முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படட நிலையில் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்ட பின்னர் குறித்த நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லையெனில் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்கப்படும், தொற்று இனம்காணப்பட்டால் உரிய கொரோனா நடைமுறைக்கமைய தகனம் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சுதந்திரபுரம் கொலனி பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன் என்பவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிசார், கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM