மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறினால், நான் இனவாதியா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு மாகாணத்தில் 1000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 500 மாதிரிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 2,200 கொரோனா நோயாளிகள் உள்ளார்கள். 52 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒட்சிசன் வழங்குவதற்கான வசதிகள் இல்லை. நோயாளர் காவு வண்டிக்காக 194 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஏன் நீங்கள் வேற்றுமை காட்டுகின்றீர்கள்? என கேள்வியெழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இன்று அரசாங்கத்தினால் கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நிதி வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுள்ளோம். பரிசோதனைக் கூடங்களை அதிகரிக்கவும், 24 மணித்தியாலங்கள் வரை சேவையில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம். கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றோம்.' எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் வழங்கிய சாணக்கியன், 'பிரதமர் கூறிய வார்த்தையை கூட நீங்கள் கேட்கவில்லை. Cath lab என்று கூறியவுடன் என்னை இனவாதி என்றார். பிரதமருக்கு வழங்கிய அறிக்கையினை கூட நீங்கள் நிறைவேற்றவில்லை. இனவாதத்தை நான் அல்ல நீங்கள் தான் தூண்டுகின்றீர்கள்.' எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM