தனது பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு காய்ச்சிய  51 வயதுடைய பாட்டனை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி சம்ப இடத்திற்கு விரைந்த பொலிஸார், கண்டி அலவத்துகொடை பிரதேசத்தில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

 தனது மகளது புதல்வியின் (பேத்தியின்) பிறந்த தின கொண்டாட்டத்திற்காக கசிப்பு தயாரித்தகாக கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 375 மில்லிலீற்றர் கசிப்பையும் கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கண்டி நீதிவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.