கமல்ஹாசனின் சகோதரரும், நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் தந்தையுமாகிய நடிகர் சாருஹாசன், புதுமுக இயக்குநர் விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் டானாக நடிக்கிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, 'இயக்குநர் விஜய் வந்து எம்மிடம் கதையைச் சொல்லி கதைக்கான டாக் லைனையும் சொன்னார். அதாவது நோ மேக்கப் நோ ட்ரக்ஸ் இதுதான் டாக் லைனாம். இதில் வயதான டான் கேரக்டர் ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு நடிக்கவேண்டும் என்றார். எனக்கு 85 வயதாகிறது. எல்லோரும் என்னை தாத்தா என்று கூப்பிட்டாகிவிட்டது. இந்த வயதில் இந்த கேரக்டரை நான் ஏற்கவேண்டுமா? என கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்ததால் மறுபேச்சு பேசாமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்." என்றார்.

சாருஹாசன் வில்லனாக நடிக்கும் இந்த படத்தை இசையமைப்பாளர் பிரசாத் நிக்கி தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்