கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் ஜனநாயக இடதுசாரி முன்னணியில் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ரியாஸ்தீன் தலைமையில் நேற்று(17) கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இதன்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவநாணயகாரவிடம் கட்சி அங்கத்துவத்தை நஜீப் ஏ மஜீட் பெற்றுக்கொண்டதோடு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை திருகோணமலை மாவட்டத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் கட்சியின் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கந்துரையாடலில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயகார, கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் மரைக்கார்,முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோருடன் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM