எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன் காலமானார்

By Gayathri

18 May, 2021 | 03:24 PM
image

கரிசல்காட்டு இலக்கியவாதியும், இலக்கியத்திற்காக உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது பெற்றவரும், தமிழிலக்கிய எழுத்தாளருமான கி.ரா. எனப்படும் கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி நேற்றிரவு காலமானார்.

கரிசல்காட்டு இலக்கியத்தின் அடையாளமாக திகழ்ந்த கி.ரா. எனும் கி. ராஜநாராயணன் உடல் நலம் குன்றி நேற்றிரவு காலமானார். அவரது உடல் தற்போது புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், வாசகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடசெவலில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. 

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் புதுச்சேரியிலிருந்து சொந்த ஊருக்கு கி.ராவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது அவரது உடல் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில்,

' கரிசல் குயில் கி.ராஜநாராயணன் மறைவால் தமிழ் தாய் தன் அடையாளங்களில் ஒன்றை இழந்து தேம்புகிறாள். கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும். கி.ராஜநாராயணன் இழந்து வாடும் குடும்பத்தினர், வாசகர்கள், அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்' என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

' நாட்டுப்புற இலக்கியத்தை முதன்மைப்படுத்தியதில் கி.ராவிற்கு தனி இடம் உண்டு. தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசைவழியை உருவாக்கி கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

' கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி, பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்கு புகழஞ்சலி' என பதிவிட்டிருக்கிறார்.

கவிஞரும் திமுகவின் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது சுட்டுரையில்,

' எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர் கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன் கரிசல் வட்டார அகராதி தொகுத்ததன் மூலம் வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர்'  என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் சிவகுமார் தன்னுடைய சுட்டுரையில்,

'ஞான தந்தையை இழந்து விட்டேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய சுட்டுரையில், 

'நூறு ஆண்டுகள் வாழ்ந்து நிறைவான பெருவாழ்வு கண்ட கரிசல் இலக்கியச் செம்மல் கிரா அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம். மக்கள் மொழியில் இலக்கியம் படைத்து, இலக்கிய மொழியின் மரபை உடைத்து, கரிசல் மண்ணுக்கு பெருமை சேர்த்த கனித்தமிழின் காலக்கொடை. வாழ்க அவர் புகழ்! வெல்க கரிசல் தமிழ்!'  என பதிவிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இருவர்' முதல் 'பொன்னியின் செல்வன்' வரை...

2022-10-05 12:32:07
news-image

கதாசிரியரானார் யோகி பாபு

2022-10-05 11:23:02
news-image

'பொன்னியின் செல்வன்' பாகம் 1 -...

2022-10-04 17:22:13
news-image

சத்யராஜ் - வசந்த் ரவி இணையும்...

2022-10-04 10:53:35
news-image

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின்...

2022-10-04 10:53:16
news-image

தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர்...

2022-10-01 16:04:14
news-image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற...

2022-10-01 16:03:52
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2022-10-01 16:03:39
news-image

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்'...

2022-10-01 16:02:55
news-image

பொன்னியின் செல்வன் பாகம் 1 -...

2022-10-01 12:21:05
news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28