குடல் அழற்சியை குணப்படுத்தும் இஞ்சி

Published By: Robert

24 Aug, 2016 | 12:23 PM
image

குடல் அழற்சி நோயை இஞ்சி குணப்படுத்துகிறது என்று ஜோர்ஜியா பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

எம்மில் பலருக்கும் சளி, குமட்டல், வலியுடைய மூட்டு வீக்கம், கடுமையான ஒற்றைத்தலைவலி மற்றும் உயர் குருதி அழுத்தம் ஆகியவற்றின் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணமளிப்பவையாகவும், குணப்படுத்துபவையாகவும் இஞ்சி இருந்து வந்தது அனைவருக்கும் தெரியும். 

அத்துடன் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும் இஞ்சி பங்கு வகிப்பதையும் ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் குடல் புண் அதாவது குடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்துவதில் இஞ்சி பயனளிக்கிறது என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இதிலுள்ள பாஸ்பாரீரிக் என்ற அமிலம் இப்பணியை ஆற்றுவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் பசுமையான இஞ்சியை தோலை நீக்கி பயன்படுத்தலாம் அல்லது இஞ்சியை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்தலாம். சிலர் இஞ்சி கலந்த தேநீரைப் பருகுவார்கள். இதுவும் சிறந்த பலனை அளிக்கும். மேலும் தேனில் கலந்த இஞ்சியையோ அல்லது இஞ்சி பொடியையோ சாப்பிட்டாலும் பலனளிக்கும். அதனால் இனிமேல் குடலில் புண் என்றாலோ அல்லது குடலில் அழற்சி என்றாலோ இஞ்சியை சாப்பிட்டால் அல்லது சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொண்டால் அவை குணமாகும் என்பது உறுதி.

டொக்டர் எஸ் அசோக் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right