யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

By Vishnu

18 May, 2021 | 12:33 PM
image

இலங்கை இராணுவத்தின் (வழக்கமான மற்றும் தன்னார்வப் படை) மொத்தம் 452 அதிகாரிகளுக்கு ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைவாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் 4, 289 இராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த தரங்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பெறுவதற்காக (மே 18) நாளில் பயங்கரவாதத்தை தோற்கடித்து 12 ஆவது ஆண்டின் 'யுத்த வெற்றி தினமான இன்றைய தினத்தை நினைவினை முன்னிட்டே இந்த பதிவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right