முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வட மாகாணத்தில் 378 பேருக்கு கொரோனா தொற்று 

Published By: Digital Desk 4

17 May, 2021 | 10:34 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை (மே 17) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 976 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 117 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6 பேரும் மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் என 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 61 பேரும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேரும் என 66 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தரும்புரம் வைத்தியசாலையில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மூவருக்கும் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், சாவாகச்சரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 960 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47