அனுர குமாரவின் ரிட் மனு பரிசீலனைக்கு - மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

Published By: Digital Desk 4

17 May, 2021 | 10:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக தம்மை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, அரச சட்டவாதி ஜனக பண்டார ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை எதிர்வரும் 25 ஆம் திகதி பரிசீலிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி ருவன் பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போது அமைச்சரவை செயலர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,  குறித்த ஆணைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க உயர் நீதிமன்ற நீதியர்சர் ஒருவரின் கீழ் மற்றொரு ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதன் பரிந்துரைகள் கிடைக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.

இதன்போது மனுதாரர், அனுர குமார திஸாநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரனணி ரொமேஷ் டி சில்வா,  குறித்த மனுவை அவசர நடவடிக்கையாக கருதி பரிசீலிக்குமாரு கோரினார்.

 அதன்படியே மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிபதிகளான ருவன் பெர்ணான்டோ  மற்றும் தேவிகா அபேரத்ன அகியோர் முன்னிலையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக குறித்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக  அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன,  உறுப்பினர்களான முன்னாள்  மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி  சந்ரசிறி ஜயதிலக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்ரா பெர்ணான்டோ,  ஆணைக்குழுவின் செயலாளர், அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவையின் செயலாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்  பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகஸ்தர்கள் ஏதேனும் வகையில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் , அதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், சட்ட மா அதிபரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, அவற்றின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் குற்றவாளிகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை சட்ட விரோத செயல் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செயற்பட்டதனூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி ஆணைக்குழு செயற்பட்டுள்ளதாக மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகையால், ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாதிருக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கடந்த மார்ச்  18 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு: சாரதிக்கு...

2026-01-20 02:46:30
news-image

இவ்வாண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நிச்சயம் நடாத்தப்படவேண்டும்...

2026-01-20 02:41:41
news-image

மாகாணசபைத்தேர்தலை இழுத்தடிக்கும் அரசாங்கத்தில் முயற்சியை முறியடிப்பது...

2026-01-20 02:39:04
news-image

பாடாசலையில் ஊடகக்கல்வியை பரந்துபட்டதாக மாற்றவேண்டும் -...

2026-01-20 02:34:53
news-image

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு; ...

2026-01-20 02:29:13
news-image

பணியாளரை நிர்வாணப்படுத்தி காணொளி வெளியிட்ட பிரபல...

2026-01-20 02:26:23
news-image

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்; வழக்கு 09ஆம்...

2026-01-20 01:14:30
news-image

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை...

2026-01-19 21:40:44
news-image

நாட்டின் உயர்ந்த வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவு

2026-01-19 23:51:05
news-image

மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது...

2026-01-19 21:39:57
news-image

அரசியலமைப்புச் சபைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம்...

2026-01-19 21:38:24
news-image

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பில்...

2026-01-19 21:36:32