மனிதர்களை தாக்கி அழித்துவரும் கொரோனா வைரஸ், எத்தகைய மனிதர்களை தாக்கி வேகமாக வளரும் என்பது குறித்தும், இதன் தாக்கத்திலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.

மனிதர்களை தாக்கும் வைரஸ்கள் உடலில் உட்புகுந்து வேகமாக வளர்வதற்கு முதன்மையான காரணி நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதுதான். உடலில் நோய் எதிர்ப்புத் திறனை குறைப்பதில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் புரியாத உண்மை. இதன் காரணமாக ஒவ்வொருவரும் தங்களது உடலின் ரத்த சர்க்கரையின் அளவைக் கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உடலுக்குள் புகும் வைரசை வேகமாக செயல்பட விடாமல் தடுக்க இயலும்.

உயர் குருதி அழுத்தம் உள்ளவர்கள், வயிற்றில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயல்பான அளவை விட குறைவாகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகள் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.

நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு முறையை முழுமையாக மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் முழுவதும் இன்சுலின் எடுத்துக் கொள்வதை முற்றாக தவிர்க்கலாம். அதே தருணத்தில் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் தங்களது உடல் எடையை குறைத்து சீரான அளவில் பராமரிக்க வேண்டும். இவற்றுடன் கொரோனா வைரஸை அழிக்க அரசின் பரிந்துரைகளான முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசியை செலுத்தி கொள்வது, கைகளை சோப்புகளால் சுத்தப்படுத்திக் கொள்வது ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றினால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.