நாளையதினம் மே18 நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு வவுனியா நீதிமன்றால் 10 நபர்களிற்கு தடை உத்தரவு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்திற்கமைய குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் காணாமல் போனோர் சங்கங்களை சேர்ந்த சரோயாதேவி,ஜெனிற்றா, கா,ஜெயவனிதா, பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார் ,கயேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சி.சிவமோகன்,  காணாமல் போனோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஐ்குமார், ஆகியோர் உட்பட 10 பேருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

குறித்த உத்தரவில் நாளையில்(18) இருந்து எதிர்வரும் 22 ஆம் திகதிவரை பிரபாகரன் மற்றும் அவரது அங்கத்தவர்களின் நினைவஞ்சலியினை பிரதானமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் வவுனியா பொலிஸ் பிரிவின் நகரசபைமண்டபம் முன்பாக உள்ள பொங்குதமிழ் தூபி, வவுனியாக்குளம்,தோணிக்கல்  உட்பட சில பகுதிகளில் நடாத்தவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.