ட்ரோன்: புறக்கணிக்க முடியாத அச்சுறுத்தல்

By Digital Desk 2

17 May, 2021 | 04:03 PM
image

சுபத்ரா

இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் காலி முகத்திடலில் இந்திய, இலங்கை விமானப்படை விமானங்களின் அணிவகுப்பு காட்சி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்றிருந்த இந்த நிகழ்வில், பலரதும் கவனத்தை ஈர்த்த விடயம். விமானப்படையின் கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் வைத்திருந்த ஆயுதம் தான்.

யாரும் அதற்கு முன்னர்  இலங்கையில் அந்த ஆயுதத்தை கண்டிருக்கவில்லை. அது என்ன ஆயுதம் என்று அறிந்திருக்கவும் இல்லை. அது ஒன்றும் குண்டுகளை ஏவுகின்ற துப்பாக்கியோ ஏவுகணையோ அல்ல. நவீன லேசர் ஆயுதம். ட்ரோன் எனப்படும், சிறிய ஆளில்லா விமானங்களைச் செயலிழக்கச் செய்யும் கருவியே இது.

சீனாவின் வூஷி (Wuxi) நகரில் உள்ள, Jiangsu Digital Eagle Technology Development நிறுவனமே, இந்த ட்ரோன் எதிர்ப்பு ஆயுதத்தை தயாரித்திருந்தது. 1500 மீற்றர் எல்லைக்குள் ட்ரோன்களை செயலிழக்கச் செய்வதற்கு QR-07S3 என்ற இந்த Portable drone jammer ஐ பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட விமான எதிர்ப்பு ஏவுகணையைப் போன்றது தான் இது. விமான எதிர்ப்பு ஏவுகணை வெப்பத்தையோ, ஒலியையோ தேடிச் சென்று தாக்கக் கூடியவை.

ஆனால் இந்த Portable drone jammer கருவியில் இருந்து புறப்படும் அலைகள், ட்ரோன்களை செயலிழக்கச் செய்து விடும். இலங்கை விமானப்படை தோளில் வைத்து ஏவப்படும் எஸ்.ஏ-16 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்திருந்தாலும், அவற்றின் தேவை இப்போது இல்லை. ஏனென்றால், வான் புலிகளின் விமானங்களுக்குப் பின்னர், வான் தாக்குதல் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்ளவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-16#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right