கொரோனா நிவாரணத்திற்கு ரஜினி 50 இலட்சம் ரூபா நன்கொடை

Published By: Gayathri

17 May, 2021 | 03:54 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் நிவாரண நிதியாக 50 இலட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினை முதல் முறையாக நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றதற்காக ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது...

'கொரோனாவை தடுக்கும் விதமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.' என்றார்.

கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு தரப்புகளிலிருந்து தமிழக அரசுக்கு நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர் அஜித்குமார் 25 இலட்சம் ரூபாவும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி தலா பத்துலட்சம் ரூபாவும், இயக்குனர் ஷங்கர் 10 இலட்சம் ரூபாவும் மற்றும் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடியும் என பலரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 இலட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30
news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39