எம்.எஸ்.தீன் 

ஒரு அரசியல் கட்சியின் வெற்றிக்கு கூட்டுப் பொறுப்பு அவசியமாகும். ஆனால், முஸ்லிம் கட்சிகளிடம் கூட்டுப் பொறுப்பு என்பது முற்றாக இல்லாததொரு அம்சமாகவே இருந்து வருகின்றது. கூட்டுப் பொறுப்பை மீறுகின்றவர்கள் பெரும்பாலும் மக்கள் பிரதிநிதிகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

  

அதுமட்டுமன்றி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் எடுத்துக் கொண்டால் ஆளுந்தரப்பினராக இருப்பதற்கே அதிக விருப்பைக் கொண்டவர்கள்.

  

ஆனால், இம்முறை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கும், அதன் உபபிரிவாகிய 17இற்கும் ஆதரவு வழங்கியதன் முக்கிய நோக்கம் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையாவது தம்மீது இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

  

அதனை அரசாங்கம் எக்குறையுமில்லாது பூர்த்தி செய்து கொடுத்துள்ளது. ஆனால், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதனால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மேலும் வலுப்பெற்றுள்ளது. ஆயினும், இக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை. அகவே நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்த இவர்களுக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருக்கின்றதா என்பதில் சந்தேகமே நீடிக்கின்றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-16#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.