கேள்விக்குள்ளாகும் அடிப்படை உரிமைகள்

Published By: Digital Desk 2

17 May, 2021 | 03:02 PM
image

கார்வண்ணன்

சில நாட்களுக்கு முன்னர், விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி அளித்திருந்தார். அந்தச் செவ்வியில் அவர் மனித உரிமைகளை விட தேசிய பாதுகாப்பே முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

“ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானது. அதற்காக சமரசம், தியாகங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. மனித உரிமைகள் முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் தேசிய பாதுகாப்பே முதன்மையானது.” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து தேசிய பாதுகாப்பின் பெயரால் இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. ஒரு அரசைப் பொறுத்தவரையில், அதனை நிர்வகிக்கும் அரசாங்கத்துக்கு, மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தும் அதிகாரம் வழக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான், சட்டங்களும், தேசிய பாதுகாப்புச் சார்ந்த கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஒருவர் என்ற வகையிலேயே விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி தேசிய பாதுகாப்பே முதன்மையானது என்று கூறியிருக்கிறார். ஆனால் சாதாரண மனிதனைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பை விட, மனிதனின் அடிப்படை உரிமைகளே முதன்மையானது.

ஜனநாயக சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும், எல்லா அடிப்படை உரிமைகளையும் கொண்டவனாக இருக்கிறான். இறைமை என்பது மக்களிடமே இருக்கிறது. அவ்வாறான நிலையில் மனிதனின் அல்லது மனித கூட்டத்தின் இறைமையைத் தாண்டி, அவனது உரிமைகளைத் தாண்டி, இன்னொரு விடயம் முக்கியத்துவம் பெறுவது சரியானதா என்ற கேள்வி உள்ளது.

மனித உரிமைகள் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளையும் சார்ந்த ஒரு விடயம். அதனை மீறும் போது அல்லது புறக்கணிக்கும் போது, ஒரு அரசின் ஒட்டுமொத்த செயல்முறைகளுமே, அவப்பழிக்கு உள்ளாகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-16#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04