ஹட்டன் பிரதான தபால் நிலையத்தின் இரு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் தற்சமயம் ஹட்டன் பிரதான தபால் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவான ஆண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ராமய்யா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளான தபால் நிலைய ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை பயணக்காட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அட்டன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.