மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 34 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

By Vishnu

17 May, 2021 | 11:55 AM
image

(செ.தேன்மொழி)

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை 34 வாகனங்கள் மாகாண எல்லைகளை கடக்க முயன்றதுடன், அவை அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.

மாகாண எல்லைகளை கடக்க முற்படும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்களுக்காக இதுவரையில் அறிவுறுத்தல்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. 

எனினும் இனிவரும் காலங்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல்மாகாணத்திற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் தொடர்பில் 14 பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருக்கின்றன. 

அதற்கமைய 1583 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வாகனங்களில் பயணித்த 3452 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பெரும்பாளானோர் அத்தியாவசிய சேவையின் நிமித்தமே சென்றுள்ளதுடன், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 213 பேருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறனார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41