முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு செல்லும் வீதிகளை தடை செய்ய பொலிசார் முயற்சி

Published By: J.G.Stephan

17 May, 2021 | 11:23 AM
image

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் வருடம் தோறும் மே 18 தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைந்து உலகம் பூராகவும் உள்ள தமிழ் உறவுகள் மே 12 தொடக்கம் 18 வரை இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிப்பதோடு, மே 18 ம் திகதி அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அதிகளவான உறவுகள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் மே 18  பாரிய அளவில் நினைவேந்தல் நிகழ்வு  வருடம்தோறும் இடம்பெறும் .

அந்தவகையில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடாத்த  27 பேருக்கு பொலிசார் நீதிமன்றில்  தடை உத்தரவு பெற்றுள்ள அதேவேளை இன்றும் சுமார் 20 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும்  அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பொலிசார் வீதிக் தடைகளை இடுவதற்கு பொருட்கள் கொண்டு வந்து இறங்கியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியில் பொலிஸ் நீதித்துறை போடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37