வவுனியா - மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு

Published By: Digital Desk 4

17 May, 2021 | 07:14 AM
image

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 255 B கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மன்னகுளம் பகுதியில் தொல்பொருள் சின்னங்களை கொண்ட ஒரு தளம் காணப்படுவதாக சிங்க ரெஜிமென்டின் 16 ஆவது படைபிரிவின்  கட்டளை அதிகாரியின் அறிவிப்பை தொடர்ந்து வவுனியா தொல்பொருள் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள்  குழுவினரால்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் 60-70 சென்றி மீற்றர் உயரத்திற்கு இடைப்பட்ட 12 கற் தூண்களை கொண்ட கட்டிட அமைப்பும் அதில் சிங்கள எழுத்தினால் பூஜை தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாகவும் கி.மு 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது எனவும், அங்கு பழைய கட்டிடங்களுக்கான செங்கல் மற்றும் ஓடுகள், இருப்பதாகவும் இக் கட்டிடம் 50 சதுர மீற்றர் பரப்பளவை கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும்  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலை, கோடலிபறிச்சான் என தொடர்ந்து தற்போது மன்னகுளம் பகுதியையும் தொல்லியல்  திணைக்களம் உரிமை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40