இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.