திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு

By T Yuwaraj

16 May, 2021 | 04:47 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள் கொவிட் 19 காரணமாக பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த அறிக்கையின் பிரகாரம் நேற்று (15) காலை 10.00 மணி தொடக்கம் இன்று (16) காலை 10.00 மணி வரையான தகவல்கள் மூலமான புள்ளி விபரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இதன் பிரகாரம் 24 மணி நேரத்திற்குள் 55 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 57 பி.சி.ஆர் மாதிரிகளும் 206 அன்டிஜன் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன. 

மூதூர் சுகாதார பிரிவில் 22 தொற்றாளர்களும் திருகோணமலை சுகாதார பிரிவில் 11 தொற்றாளர்களும் கிண்ணியாவில்  06, குறிஞ்சாக்கேணியில் 06, குச்சவெளியில் 04, திருகோணமலையில் 02, உப்புவெளியில் 02, கந்தளாய்யில் 02 என மொத்தமாக புதிய 55 தொற்றாளர்கள் 24 மணி நேரத்தினுள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் (மே மாதம்) மட்டும் தற்போது வரை 709 கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டம் முழுதும் 2150 தொற்றாளர்கள் மொத்தமாக இனங்காணப்பட்டுள்ளார்கள். 

24 மணி நேரத்தில் மரணப் பதிவாக திருகோணமலை சுகாதார பிரிவில் 01,உப்புவெளி 01, கிண்ணியா 01, மூதூர் 01, கந்தளாய் 01 என ஐந்து தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22