கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருள் களியாட்டமொன்றை நடத்திய 2 பெண்கள் உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதான சந்தேக நபரொருவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.