நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் வேளையில் ஐந்து வீடுகள் மற்றும் கோவில் ஒன்றில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதிகளிளையே குறித்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றள்ளன.

நாவற்குழி 5 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள்ளும் அடுத்தடுத்து புகுந்த திருடர்கள், ஒரு வீட்டில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும், மற்றொரு வீட்டில் 40 க்கும் மேற்பட்ட வளர்ப்பு புறாக்களையும், மற்றைய வீட்டில் 16 வளர்ப்பு கோழிகளையும், மற்றைய வீட்டில் 6 வளர்ப்பு கோழிகளையும் ஐந்தாவது வீட்டில் 5 வளர்ப்பு முயல்களை திருடிச்சென்றுள்ளனர்.

இதேவேளை, நாவற்குழி சித்திர வேலாயுதர் ஆலயத்தினுள் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள், ஆலயத்திற்குள் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில், வீடுகளின் உரிமையாளர்கள், ஆலய நிர்வாகத்தினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.