இத்தாலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் அமெரிக்க வீரர் ரெய்லி ஓபெல்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

ரோமில் நடந்து வரும் ஆடவர் இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை ஆடவர்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டதில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்காவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 34 வயதான நடலால் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஓபெல்காவை வீழ்த்தினார்.

இறுதிப் போட்டியில் நடால், 6-3, 6-7 (5-7) 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலிய லோரென்சோ சோனெகோவை வீழ்த்திய உலக நம்பர் ஒன் சம்பியன் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்வார்.