முன்னணி பொலிவுட் நடிகரான சல்மான் கான் நடிப்பில் டிஜிட்டல் தளத்தில் வெளியான 'ராதே புதிய சாதனை படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புதிய திரைப்படம் 'ராதே'. இந்தப் படத்தில் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் பொலிவுட் நடிகை திஷா பதானி, ரன்தீப் ஹூடா, கோலிவுட் நடிகர் பரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பட மாளிகையில் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு ரமழான் பண்டிகையை முன்னிட்டு மே 13ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனாத் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பட மாளிகையில் வெளியாகாமல், நேரடியாக ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.
உலகெங்குமுள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் டிஜிற்றல் தளத்தில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் பட மாளிகையிலும் வெளியாகியிருக்கிறது.
இருப்பினும் இந்தியாவில் இப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் கட்டணம் செலுத்தி பார்வையிடும் முறையில் வெளியானது.
நேற்று வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாரிய வரவேற்பை பெறாவிட்டாலும், 'ராதே' திரைப்படத்தை ஒரே நாளில் 4.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் ஒரு திரைப்படத்தை வெளியான தினத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை இப்படம் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து நடிகர் சல்மான்கான் தன்னுடைய டுவிட்டரில்,
'அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள். பதில் நன்றியாக முதல் நாளில் அதிகம் பார்வையிடப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை 'ராதே'விற்கு தந்தமைக்காக அனைவருக்கும் நன்றி.
உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் திரைத்துறை உயிர்ப்புடன் இருக்காது. நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ‘ராதே' திரைப்படம் வெளியான முதல் நாளில் 40 லட்சம் பார்வையாளர்களும் கட்டணம் செலுத்தி பார்வையிட்டிருந்தால்... இந்தப் படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM