மன்னாரில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: மொத்த எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

Published By: J.G.Stephan

16 May, 2021 | 09:35 AM
image

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (16) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 400  கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 728 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அவற்றில் யாழ்ப்பாணத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று சனிக்கிழமை(15) மாலை கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றில் 10 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் மன்னார் பெரியகமம், சாவக்காடு, உப்புக்குளம், பேசாலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களாவர். அவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 527 பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், இந்த வருடம் ஜனவரி தொடக்கம் மொத்தமாக 400 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 41 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இது வரை 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாதம் 1,288 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 527 பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. 

காய்ச்சலுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது சுவாச குணங்குறிகளுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35